திருமுருகன் பூண்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் கொரானா பேரிடர் காலத்தில் தங்களுடைய உழைப்பைக் கொடுத்து மக்களை பாதுகாப்பு செய்து வருகின்றனர் .பேரூராட்சி செயல் அலுவலர் தி,ஈஸ்வரமூர்த்தி அவர்கள் வழிகாட்டுதலோடு .அவர்களுக்கு தேவையான சேனிடைசர் மற்றும் முககவசம் உள்ளிட்ட பொருள்களை சாய்கிருபா மெடி டிரஸ்ட் நிர்வாகம் இயக்குநர் டாக்டர் சுந்தரன் அவர்கள் வழங்கினார் .அரசு மருத்துவ மனை மருத்துவர் திருமதி டாக்டர் கார்த்திகை சுந்தரன் அவர்கள் கொரானா தொற்று எவ்வாறு பரவுகிறது இதிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு எல்லாம் காத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு செய்தார் இந்நிகழ்விற்கு தலைமையேற்று செயல் அலுவலர் அவர்கள் பேசினார் ,,பேரூராட்சி நிர்வாகம் நன்றி தெரிவித்தது அனைவருக்கும் ,,


திருமுருகன் பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், சுகன் சுகா மருத்துவமனை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் இம்முகாம் நடைபெற்றது.


அவினாசி போலீசாருக்கு இரத்தக்கொதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ச்சியாக பணிபுரிகின்றனர், அவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டும் வகையில், அவினாசி போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இலவச பொதுமருத்துவ முகாம், அவினாசி அருகே உள்ள கருவலூர் உப்பிளிபளயத்தில் செல்லாண்டி அம்மன் பள்ளி உள்ளது, இந்த பள்ளி வளாகத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. செல்லாண்டி அம்மன் பள்ளி, சாய் கிருபா மெடி டிரஸ்ட் மற்றும் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் ஆகியவை இனைந்து நடத்திய இந்த முகாமை பள்ளி முதல்வர் திரு.ராமசிவசாமி துவங்கிவைத்தார்